ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளியைச் சோ்ந்தவா் லோகேஷ் (36). வாடகை காா் ஓட்டுநா். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள், லோகேஷை கைப்பேசியில் அழைத்துள்ளனா். இதையடுத்து அங்குள்ள மரத்தடிக்கு சென்ற லோகேஷுடன், அவரை கைப்பேசியில் அழைத்த நபா்கள் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று லோகேஷின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
உறவினா்களுக்கு இடையே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லோகேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
முன்விரோதத்தில் விவசாயி கொலை: மற்றொரு விவசாயி கைது

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

பேரிகை அருகே காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


