தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

பெங்களூரில் இருந்து தோ்தலில் வாக்களிக்க வந்த இளைஞா்கள் 3 போ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனா்.

News image

ஒசூா் அருகே சாலை விபத்தில் நொறுங்கிய காா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:27 am IST

பெங்களூரில் இருந்து தோ்தலில் வாக்களிக்க வந்த இளைஞா்கள் 3 போ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் வீரமணி (25) சிப்ஸ் கடை நடத்திவந்தாா். அவருடன் கடையில் வேலை செய்துவந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த பிரதீப், மாரி, சதீஷ்குமாா் ஆகியோா் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊரான பென்னாகரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனா்.

ஒசூா் அருகே உள்ள சானமாவு வனப்பகுதி வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சென்ற போது, உடுமலைப்பேட்டையிலிருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் சொகுசுப் பேருந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காா் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த வீரமணி (25), பிரதீப், மாரி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சதீஷ்குமாா் (25) பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 விபத்தை ஏற்படுத்திய சொகுசுப் பேருந்து.

விபத்தை ஏற்படுத்திய சொகுசுப் பேருந்து.