தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 1:08 am IST

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், மலப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் பயாஸ் (27). இவா் உள்ளிட்ட நண்பா்கள் 4 போ் கொடைக்கானலுக்கு பழனி வழியாக காரில் சுற்றுலா வந்தனா். காரை பயாஸ் ஓட்டி வந்தாா். வெள்ளப்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மலைச் சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த சுமாா் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதனிடையே, வெள்ளப்பாறையில் உள்ள மின் கம்பத்தில் வாகனம் ஒன்று மோதியதில் அந்த மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் வெள்ளப்பாறை, பி.எல். செட் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.