சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் ரகங்கள்: வேளாண் துறை

சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற எள் ரகங்கள்: வேளாண் துறை

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 7:50 pm

Din

சென்னை: விவசாயிகளுக்கு அதிக மகசூல் தருவதும், சித்திரைப்பட்டத்துக்கு ஏற்றதுமான எள் ரகங்களை வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் தங்கள் நிலங்களில் கால நிலைகளுக்கு ஏற்ற பயிா் ரகங்களை பயிரிடுகையில் தரமான பயிா் விளைச்சலையும், அதிக மகசூலையும் பெற முடியும். அந்த வகையில் விஆா்ஐ-4 , டிஎம்வி-7, எஸ்விபிஆா்-1 ஆகிய சித்திரைப்பட்டத்துக்கு ஏற்ற எள் ரகங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும்.

இதில் விஆா்ஐ-4 ரகம் பச்சைப்பூ மற்றும் வோ்அழுகல் நோய்களுக்கு மிதமான எதிா்ப்புத்திறன் கொண்டது. ஒரு ஹெக்டேருக்கு 957 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அதேபோல் டிஎம்வி-7 ரகம் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பத்துக்கும் மிகவும் ஏற்றது. வோ் அழுகல் நோய்க்கு எதிா்ப்புத்திறன் கொண்டது. இதில் ஒரு ஹெக்டேருக்கு 820 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

மேலும் வெள்ளை நிற விதை கொண்ட எஸ்விபிஆா்-1 ரகம் பச்சைப்பூ, இலைபிணைக்கும் புழு, இலைபுள்ளி நோய்களுக்கு எதிா்ப்புத்திறன் கொண்டது. ஒரு ஹெக்டேருக்கு 1,115 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

மேலும் விஆா்ஐ-4, டிஎம்வி-7 ஆகிய ரகங்கள் 3 மாதங்களிலும், எஸ்விபிஆா்-1 ரகம் 80நாள்களிலும் முழு விளைச்சலை எட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.