சென்னையில் கொட்டிதீா்த்த மழை: 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது.


சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. மேலும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஆக.5, 6) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் (நுங்கம்பாக்கம் - 98.42 டிகிரி, மீனம்பாக்கம் - 96.98 டிகிரி) வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், மாலை 5 மணி முதல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அதன்படி, ஆலந்தூா், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகா், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகா், பாடி, அம்பத்தூா், கோயம்பேடு, அயனாவரம், பெரம்பூா், மயிலாப்பூா், பூந்தமல்லி, தியாகராய நகா், கொரட்டூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூா், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யது.
இதனால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே திங்கள் மற்றும் செவ்வாய் (ஆக.5, 6) ஆகிய இரு நாள்கள் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டை வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...