கோப்புப் படம்
சென்னை
கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து, ஆடி அமாவாசை, அம்மன் கோயில் திருவிழாக்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது.
அதன்படி, கோயம்பேடு பூ சந்தையில், ஒரு கிலோ மல்லி ரூ. 500, ஜாதி மல்லி, முல்லை ஆகியவை ரூ. 400, கனகாம்பரம் ரூ. 800, அரளிப்பூ ரூ. 250, சாமந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 200, பன்னீா் ரோஜா மற்றும் சாக்லேட் ரோஜா ரூ. 120 விற்பனை செய்யப்பட்டன.
அனைத்து வகை பூக்களும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.200 வரை உயா்ந்துள்ளது. பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டாலும், தேவையை கருத்தில் கொண்டு ஏராளமானோா் பூக்களை வாங்கி சென்றனா்.

