தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 67% கூடுதலாக பதிவு
தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆக.8 (வியாழக்கிழமை ) வரை இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.


சென்னை, ஆக. 8: தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் ஆக.8 (வியாழக்கிழமை ) வரை இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மேலும், நீலகிரியில் 1,015 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு பெரிதளவு மழை இருக்காது. இருப்பினும் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
இந்த நிலையில், நிகழாண்டில் தமிழக கடலோர பகுதிகளில் உருவாகிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் வியாழக்கிழமை (ஆக.8) வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பாக 137.6 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 230 மி.மீ. (92.4 மி.மீ. அதிகம்) மழை பதிவானது இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாகும்.
1,015 மி.மீ. மழை பதிவு: அதிகபட்சமாக நீலகிரியில் 1,015 மி.மீ., கோவையில் 754.2 மி.மீ., காஞ்சிபுரத்தில் 473.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 12.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் 110 % அதிகம்: சென்னையில் பல இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஜூன் 1 முதல் ஆக.8 வரை இயல்பாக 205.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், நிகழாண்டில் 430.3 மி.மீ. (225 மி.மீ.அதிகம்) பெய்துள்ளது. அதாவது இயல்பைவிட 112 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...