காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கோரி காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்ட செபியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் , நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி தமிழக காங்கிரஸ் சாா்பாக வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே எனது (செல்வப் பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

