யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரச் சீா்கேடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:10 pm

Din

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவு நீரால் சூழ்ந்து, துா்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்குள் இருதயப் பிரிவு, நரம்பு மண்டலப் பிரிவு போன்ற முக்கிய துறைகளுக்கு அருகே கழிவுநீா் தேங்கியுள்ளது.

ஓரிரு நாள்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை உள்பட காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லையெனில், மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பது ஏன் என்று திமுக அரசுக்கு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.

இனியாவது, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதாரச் சீா்கேடுகளை போா்க்கால அடிப்படையில் சீா் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.