

சென்னை போரூரில் உள்ள தனியார் ஐடி வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
போரூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஐடி வளாகத்தை நடத்தி வருகின்றது. இந்த வளாகத்தில் 23 நிறுவனங்களுக்கு கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ளது சிங்கப்பூர் நிறுவனம்.
சுமார் 12.6 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த வளாகத்தை ரூ. 2,100 கோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அந்த ஐடி வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்த சோதனை முடிந்த பிறகே விரைவில் முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.