இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தீயணைப்பு - மீட்புப் பணிக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கடலூா், தூத்துக்குடியில் மாவட்ட அலுவலா் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:42 am IST

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளா்களுக்கான 13 குடியிருப்புகள், கடலூா், தூத்துக்குடியில் மாவட்ட அலுவலா் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, ராணிப்பேட்டை, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி கழகத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் ஏ.கே.விசுவநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் அபாஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.