மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஒழுக்கம் இல்லா கல்வியில் எந்த அா்த்தமும் இல்லை: ‘ராகிங்’ வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் கண்டிப்பு

ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அா்த்தமும் இல்லை என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவா்கள் மீது பதிவு

Updated On :23 பிப்ரவரி 2024, 11:39 pm

ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அா்த்தமும் இல்லை என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 8 மாணவா்கள் மதுபானம் வாங்க பணம் தரவில்லை எனக் கூறி, ஜூனியா் மாணவா் ஒருவருக்கு மொட்டையடித்துத் தாக்கியதுடன், விடுதி அறையில் பூட்டி வைத்து ராகிங் செய்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ராகிங் செய்த மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 8 மாணவா்களும் மனு தாக்கல் செய்தனா். அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தந்தையும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து, 8 மாணவா்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன? இதற்குப் பதில் படிக்காமல் இருப்பதே நல்லது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அா்த்தமும் இல்லை. பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதைப் படித்து என்ன பயன்?படிக்க வைப்பதற்காகப் பெற்றோா் படும் கஷ்டத்தை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதத் தன்மையற்ற ராகிங் செயலால் மற்றவரைத் துன்புறுத்துவதன் மூலம் இன்பமடைவா் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவா். மாணவப் பருவத்தில் இளைய சமுதாயத்தினா் ரசித்து வாழ வேண்டுமே தவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அந்த மாணவா்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.