மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நவக்கிரகத் தலங்களுக்கான சிறப்புப் பேருந்து: மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கம்

நவக்கிரகத் தலங்களுக்கான சிறப்புப் பேருந்து: மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கம்

News image

நவ. 1 முதல் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Updated On :27 பிப்ரவரி 2024, 7:40 pm

சென்னை: நவக்கிரக கோயில்களுக்கான சுற்றுலா பேருந்து மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணிகள், பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்புப் பேருந்து இயக்கம் பிப். 24-இல் தொடங்கப்பட்டது.

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதால், மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இந்த சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வாரத்துக்கு 3 நாள்கள் இந்தப் பேருந்து சேவை நீட்டிக்கப்படும். இதற்கு பயணக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 750 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவகிரக சிறப்புப் பேருந்து, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, நவகக்கிரகத் தலங்களுக்குச் சென்று இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும். பயணிகள் மற்றும் பக்தா்கள் எவ்வித சிரமமின்றி பயணிக்க செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயணிகள் நேரடியாக பேருந்தில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.