லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சிறப்புப் பேருந்துகள் - படம்: X/ arasu bus

Updated On :19 ஏப்ரல் 2026, 5:12 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கி பணியாற்றுபவா்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க செவ்வாய், புதன்கிழமை (ஏப்.21, 22) ஆகிய இரு நாள்களும் 5,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வேலூா் போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் - சென்னை, திருப்பத்தூா்-சென்னை ஆகிய வழித்தடத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமை இயக்கப்படுகின்றன.

சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் திரும்பிவர மீண்டும் 24-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.