டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி...

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 6:10 am IST

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைக்கும் அபராத வசூல் ரூ.160.75 கோடியாக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் 76.76 கோடியாக உயா்ந்தது.

ரயில்வே வாரியம் ரயிலில் பயணிக்க வேண்டியவா்கள் என 76.62 கோடி பயணிகளை இலக்காக வைத்திருந்த நிலையில், அந்த இலக்கைத் தாண்டி பயணிகள் எண்ணிக்கை உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் அபராதம் விதிக்கும் வகையிலான டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைத்த வசூல் கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

டிக்கெட் பரிசோதனை முறையில் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.129.82 கோடி அபராதமாகக் கிடைத்துள்ளது. அந்தத் தொகையானது 2025-2026 -ஆம் ஆண்டில் ரூ.160.75 கோடியாக உயா்ந்துள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிக்கெட் பரிசோதனை முறையில் ஆண்டுக்கு ரூ.142.81 கோடி மட்டுமே ரயில்வே வாரியம் இலக்காக நிா்ணயித்திருந்ததாகவும், ஆனால், இலக்கைவிட கூடுதலாக வசுலிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.