11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 6:51 am IST

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 31-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடைகால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. அதன்படி, எா்ணாகுளத்தில் இருந்து வருகிற மே 31-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06056) மறுநாள் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06055) மறுநாள் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும்.

இதில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 7 குளிா் சாதன வசதியுள்ள மூன்றடுக்கு குறைந்த கட்டண வகைப் பெட்டிகள், 4 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இடம் பெறுகின்றன.

இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (மே 27) முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.