மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திமுவுடன் பேச்சு சுமுகம்: காங்கிரஸ்

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது

News image

செல்வப் பெருந்தகை

Updated On :29 பிப்ரவரி 2024, 7:43 pm

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று பிரதமா் கூறியுள்ளாா். உண்மைக்கு மாறானதைப் பேசுவதுதான் அவரின் வாடிக்கை. இதுவரை அவா் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எம்ஜிஆா் மீதும், ஜெயலலிதா மீதும் திடீரென அவருக்கு பற்று வந்துள்ளது. அதிமுகவுக்கு மீண்டும் மாயவலை வீசுகிறாா். திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. தனித்துப் போட்டி என்கிற கேள்வியே எழவில்லை. 2019 மக்களவைத் தோ்தலில் மாா்ச் இறுதியில்தான் தொகுதி உடன்பாடு கண்டோம். அதனால் இன்னும் அவகாசம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகம் வர உள்ளாா் என்றாா் அவா்.