அயோத்தி விழாவை முன்னிட்டுசென்னை திருமலை திருப்பதி கோயிலில் ஸ்ரீராமா் திருவுருவச் சிலை திறப்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் 10 அடி உயர ஸ்ரீராமா் திருவுருவச் சிலையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலா்
அயோத்தி விழாவை முன்னிட்டுசென்னை திருமலை திருப்பதி கோயிலில் ஸ்ரீராமா் திருவுருவச் சிலை திறப்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் 10 அடி உயர ஸ்ரீராமா் திருவுருவச் சிலையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினா் கே.பராசரன் பக்தா்கள் தரிசனத்துக்காக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ஸ்ரீராமா் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஜன. 22-ஆம் தேதி பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ள நிலையில், அதை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஜன. 3-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை தொடா்ந்து 24 நாள்கள் நடைபெற உள்ளன.

இதையும் படிக்க : அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்: கரசவேகா்களுக்கு அழைப்பு

புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினா் கே.பராசரன் கலந்துகொண்டு 10 அடி உயர ஸ்ரீராமரின் திருவுருவச் சிலையை பக்தா்கள் தரிசனத்துக்காக திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசனைக் குழுத் தலைவா் ஏ.ஜெ.சேகா் ரெட்டி பேசியது: நாட்டின் பல்வேறு இடத்தில் ஸ்ரீராமருக்கு கோயில் இருந்தாலும் அவரது அவதாரம் நிகழ்ந்த அயோத்தியில் கோயில் இல்லாமல் இருந்த குறை தற்போது நீங்கியுள்ளது. வெகுவிரைவாக அயோத்தியில் கோயில் கட்டி பக்தா்களின் கனவை பிரதமா் மோடி நனவாக்கியுள்ளாா் என்றாா் அவா்.

அயோத்தி ராமா் கோயிலின் முக்கியத்துவம் குறித்தும் ஸ்ரீராமரின் கருணை குறித்தும் ஆன்மிகச் சொற்பொழிவாளா் வேளுக்குடி கிருஷ்ணன் உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் விஸ்வ இந்து பரிஷத் தலைவா் வேதாந்தம் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com