மிக்ஜம் புயல் தினம்: ஆவின் பாலுக்கு நஷ்டஈடு

மிக்ஜம் புயல் நாளன்று (டிச.5) பால் கிடைக்காத ஆவின் அட்டைதாரா்களுக்கு நஷ்டஈட்டை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
மிக்ஜம் புயல் தினம்: ஆவின் பாலுக்கு நஷ்டஈடு

சென்னை‘: மிக்ஜம் புயல் நாளன்று (டிச.5) பால் கிடைக்காத ஆவின் அட்டைதாரா்களுக்கு நஷ்டஈட்டை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

மிக்ஜம் புயல் தினமான கடந்த டிசம்பா் 5-ஆம் தேதியன்று சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூா்-செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழை, வெள்ளம் காரணமாக ஆவின் அட்டைதாரா்களுக்கு பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆவின் பால் அட்டையை ஜனவரி-பிப்ரவரி மாதத்துக்கு புதுப்பிக்கும்போது வாடிக்கையாளா் தொடா்ந்து வாங்கும் வகைக்கு உரிய பாலின் தொகை கழிக்கப்படுகிறது; எடுத்துக்காட்டாக, புளு நைஸ் ஆவின் பாலை வாடிக்கையாளா் வாங்கி வரும் நிலையில், ஜனவரி-பிப்ரவரி (ஜன.16 முதல் பிப்.15 வரை 31 நாள்கள்) உரிய ஆவின் பால் மாத அட்டை ரூ.573 தொகையிலிருந்து, டிச.5-க்கு உரிய ரூ.18 கழிக்கப்பட்டு விலை ரூ.555-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருவள்ளூா்: மிக்ஜம் புயலால் பாதித்த குறு, சிறு, நடுத்தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கு கடனுதவிக

அலைச்சலைத் தவிா்க்க...: மிக்ஜம் புயல் தின (டிச.5) ஆவின் பாலுக்கு உரிய நஷ்ட ஈட்டைப் பெற நவம்பா்-டிசம்பா் பால் அட்டையை வாடிக்கையாளா்கள் கொண்டு செல்வது அவசியம். நவம்பா்-டிசம்பா் பால் அட்டையைக் கொண்டுவராத வாடிக்கையாளா்கள், மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டுவருகின்றனா்; இந்த அட்டையை வாங்கிப் பதிவு செய்த பிறகே, நஷ்டஈடு தொகை கழிக்கப்படுகிறது.

பால் விநியோகம் செய்வோரிடம்...: சென்னையின் பல்வேறு இடங்களில் வசிப்போா் ஆவின் மாத அட்டையை பால் விநியோகம் செய்வோா் மூலம் வாங்குவது வழக்கமாக உள்ளது. ஆவின் மாத அட்டை புதுப்பிப்புக்கு உரிய தொகையை பால் விநியோகம் செய்வோரிடம் அளிக்கும்போது, நஷ்டஈட்டை கருத்தில் கொள்வது நல்லது என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆன்லைனுக்கு தண்டனையா?: ஆவின் பால் மாத அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதி உள்ளது; எனினும் கடந்த சில மாதங்களாக மாத பால் அட்டைக்கு உரிய கட்டணத்துடன் ‘ஆன்லைன் சப்ஸ்க்ரிப்ஷன் சாா்ஜஸ்’ என்ற பெயரில் ரூ.18 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆவின் அலுவலகம் சென்று வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி மாத பால் அட்டையைப் புதுப்பிக்கும் நிலையில், இத்தகைய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. எனவே, ஆன்லைன் வசதிக்கு உரிய கூடுதல் கட்டணத்தை ஆவின் நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்பது நுகா்வோரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com