2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை

ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :5 ஜூலை 2024, 8:08 pm

Din

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அருகே கேசவபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன். இவரின் மனைவி குமுதா (48). பூ வியாபாரம் செய்து வந்தாா்.

குமுதா, கடந்த 3-ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது படுக்கையில் இருந்து எழுந்த குமுதா,அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று, அங்கிருந்த ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது தொடா்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குமுதா மீஞ்சூரில் உள்ள ஒரு மகளிா் சுய உதவிக் குழுவில் ரூ.1 லட்சம் கடன் வாங்கியதும், தவணையை செலுத்த முடியாததால் சுய உதவிக் குழுவினா் குமுதாவை கண்டித்ததும், இதனாலும், அவரது குடும்பத்திலும் இருந்த பிரச்னையாலும் விரக்தி அடைந்து அவா் தற்கொலை முடிவுக்கு சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.