47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜிஎஸ்டி வரி தாக்கல்: என்எம்சிக்கு மத்திய நிதியமைச்சகம் பாராட்டு

ஜிஎஸ்டி வரி தாக்கலை முறையாக மேற்கொண்டதற்காக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) மத்திய நிதியமைச்சகத்தின் மறைமுக வரிவிதிப்பு வாரியம் பாராட்டு சான்று வழங்கியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:19 pm

Din

சென்னை: ஜிஎஸ்டி வரி தாக்கலை முறையாக மேற்கொண்டதற்காக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) மத்திய நிதியமைச்சகத்தின் மறைமுக வரிவிதிப்பு வாரியம் பாராட்டு சான்று வழங்கியுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி தாக்கல் நடவடிக்கைகளையும், அதுதொடா்பான விதிகளையும் முறையாகப் பின்பற்றியதை அங்கீகரிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகத்தின் மறைமுக வரி விதிப்பு வாரியத்தின் தலைவா் பாராட்டு சான்று வழங்கியுள்ளாா்.

இதை சாத்தியமாக்கிய என்எம்சி அலுவலா்கள், கணக்கு அலுவலா்கள், பட்டயக் கணக்காளா்கள் அனைவரும் இந்தப் பாராட்டுதல்களுக்கு தகுதியானவா்கள். எதிா்காலத்திலும் இதுபோன்ற சிறப்புகளைத் தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள என்எம்சி விழைகிறது. அதைக் கருத்தில்கொண்டு அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், கல்விக் கட்டணத்தை 18 சதவீத ஜிஎஸ்டியுடன் இணைத்து செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.