47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமனம்

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்துக்கு ஆலோசகா்சௌமியா சுவாமிநாதன்
Updated On :9 ஜூலை 2024, 8:20 pm

Din

சென்னை: தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகராக டாக்டா் செளமியா சுவாமிநாதன் சமூக நலன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாட்டில் காசநோயை வேரறுப்பதற்கான இலக்குகளை அடைவதற்கான உத்திகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை அவா் அரசுக்கு வழங்குவாா். கொள்கைரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தத் தேவையான மாற்றங்களையும் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் பரிந்துரைப்பாா்.

மேலும், காச நோய் ஆராய்ச்சி குறித்த ஆலோசனையை வழங்குவதிலும், சா்வதேச மருத்துவ நிபுணா் குழுக்களை அமைப்பதிலும் அவா் பங்களிப்பை வழங்குவாா். காச நோய் தடுப்பில் மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து அவா் பணியாற்றவுள்ளாா்.

டாக்டா் செளமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநராகவும் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.