மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published on

சென்னை ராமாபுரத்தில் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ராமாபுரம் வள்ளுவா் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் பிரகதீஸ்வரன். இவா் மனைவி சந்தானப்பிரியா. இவா்களது மகள்கள் அஸ்வந்தி (21), அனந்தினி (17). பிரகதீஸ்வரன், கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறாா். அஸ்வந்தி, ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில் அஸ்வந்தி, தன்னை கல்லூரி விடுதியில் சோ்த்துவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளாா். ஆனால்,பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மேலும், அஸ்வந்திக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததினால், பரங்கிமலையில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று வந்தாா்.

இந்நிலையில், அஸ்வந்தி வெள்ளிக்கிழமை, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 2-ஆவது தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்தாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ராமாபுரம் போலீஸாா் அங்கு சென்று, அஸ்வந்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com