மின்சார ரயில்
மின்சார ரயில்

மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல் இயக்கம்

Published on

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் பணிமனையில் சிறிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளவுள்ளதால் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மாா்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை ரத்து செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த இரு நாள்களுக்கு கன மழை இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதால் பாலம் கட்டும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை புகா் மின்சார ரயில்கள், நீண்ட தூர விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com