பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னையில் மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

ரயில் சேவை குளறுபடியால் வெள்ளிக்கிழமை தண்டவாளத்தில் இறங்கி நடந்த பயணிகள்

Published On :24 பிப்ரவரி 2026, 9:10 am IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூா் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20 ஆம் தேதிமுதல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6-ல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்தன.

இதனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்குச் சென்று திரும்பும் லட்சக்கணக்கானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தேர்வு காலத்தில் மாணவர்களும் நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும், சிக்னல் கிடைக்காமல் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாகவும் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 49 ரயில் சேவைகளை இன்றுமுதல் குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Summary

Chennai commuters in shock! 49 more electric trains cancelled!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.