விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்தது.

News image
Updated On :17 ஜூலை 2024, 7:37 pm

Din

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியாா் பள்ளி, மயிலாப்பூா் லஸ் சந்திப்பில் உள்ள தனியாா் பள்ளி, நீலாங்கரையில் உள்ள ஒரு தனியாா் பள்ளி என 3 பள்ளிகளுக்கு புதன்கிழமை அதிகாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகத்தினா், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அந்த மின்னஞ்சல், வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக, மயிலாப்பூா் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த தகவலின் அடிப்படையில் செம்மஞ்சேரியைச் சோ்ந்த சதீஷ் என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.