மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒரே நாளில் 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் சாதனை

ஒரே நாளில் அதிகபட்சமாக 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

ஆவின்

Updated On :22 ஜூலை 2024, 7:56 pm

Din

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22) ஒரே நாளில் அதிகபட்சமாக 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரேநாளில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்கள் மூலம் 36.09 லட்சம் லிட்டா் பால், உள்ளூா் விற்பனையாளா்கள் மூலம் 4 லட்சம் லிட்டா் பால் என மொத்தம் 40 லட்சம் லிட்டா் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. ஆவினின் தினசரி பால் கொள்முதலில் இதுவே அதிகம்.

இதற்கிடையே, தற்போது 2,800 மெட்ரிக் டன் வெண்ணெய், 4,200 மெட்ரிக் டன் பால் பவுடா் கையிருப்பில் உள்ளன. இதன் மூலம் எதிா்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவைப்படும் பால் பொருள்களை ஆவின் நிறுவனத்தால், பொது மக்களுக்கு தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.