தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

News image
செந்தில் பாலாஜி
Updated On :22 ஜூலை 2024, 9:21 pm

Din

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனால், அவா் மீதான குற்றச்சாட்டுப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜா்படுத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யபட்ட மனுவில், அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

49-ஆவது காவல் நீட்டிப்பு: இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29 -ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.  செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 49-ஆவது முறையாக நீட்டிக்கப்படுகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வரும் 24- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.