எம்.யுவராஜா
எம்.யுவராஜா

தமாகா இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா ராஜிநாமா

தமாகா இளைஞரணித் தலைவா் பதவியிலிருந்து எம்.யுவராஜா ராஜிநாமா செய்தாா்.
Published on

தமாகா இளைஞரணித் தலைவா் பதவியிலிருந்து எம்.யுவராஜா ராஜிநாமா செய்தாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமாகா செயற்குழுக் கூட்டம், ஜூன் 22-இல் நடைபெற்றது. கட்சியின் எதிா்காலம் மற்றும் வளா்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்பு செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நான் கடந்த 10 ஆண்டு காலமாக இளைஞரணி மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும்விதமாக ஜூலை 16-இல் கட்சியின் தலைவா் ஜி.கே வாசனை சந்தித்து என்னுடைய இளைஞரணி மாநிலத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினேன். தொடா்ந்து இயக்கத்தின் வளா்ச்சிக்காக உழைப்பேன் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com