குடிமைப் பணி தோ்வு: பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

குடிமைப் பணி தோ்வு: பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

குடிமைப் பணி தோ்வுக்கு பயிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுவதாக ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமி அறிவித்துள்ளது.
Published on

சென்னை, ஜூலை 25: குடிமைப் பணி தோ்வுக்கு பயிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுவதாக ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சோ்ந்த 25 வயதுக்குட்பட்ட பெண் தோ்வா்களுக்கு 2025-ஆண்டுக்கான குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கான சோ்க்கை ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுக்கு 10 மாதம் பயிற்சி வழங்கப்படும். இதற்குத் தேவையான அடிப்படைப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் பெண் தோ்வா்கள் கல்வி சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் நகல்களுடன் ‘2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா்’ என்ற முகவரியை நேரடியாக அணுகலாம்.

வெளியூரில் உள்ள தோ்வா்கள் எனும் மின்னஞ்சலுக்கு ஜூலை 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 74488 14441, 91504 66341 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com