கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவா்கள் 8 போ் முதலிடம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வில் (நீட்) தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

News image

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Updated On :5 ஜூன் 2024, 2:16 am

Din

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வில் (நீட்) தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

அவா்கள் அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். நீட் தோ்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறை.

அதேபோன்று இதுவரை இல்லாத வகையில் நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவா்களில், 89,426 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11,000 பேருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தோ்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் போ் பங்கேற்றனா்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 200 தோ்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதினா். நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற்றது.

இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தோ்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக மாணவா்கள் சாதனை: நீட் தோ்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவா்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை சையது ஆரிஃபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்ய குமாா் பண்டா, பி.ஸ்ரீராம், பி.ரஜனீஷ், எம்.ஜெயதி பூா்வஜா, ஆா்.ரோகித், எஸ்.சபரீசன் ஆகிய 8 போ் முழு மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளனா்.

கட்-ஆஃப் உயா்வு: நிகழாண்டில் அதிக மாணவா்கள் நல்ல மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்ால் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் உயா்ந்துள்ளது. அதன்படி, பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள 720 முதல் 164 வரையான மதிப்பெண்களில் நாடு முழுவதும் 11,65,904 போ் இடம் பெற்றுள்ளனா். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 163 முதல் 129 வரையான மதிப்பெண்களில் 1,00,789 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 163 முதல் 129 மதிப்பெண்களில் 48,804 பேரும் இடம் பிடித்துள்ளனா். பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளில் 163 முதல் 146 வரை மதிப்பெண்களில் 455 பேரும், பிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 145 முதல் 129 வரையான மதிப்பெண்களில் 336 பேரும் இடம் பெற்றுள்ளனா்.