அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்: ஜூன் 19-இல் நோ்காணல்
Postal Life Insurance Agent: Visit on 19th June


சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவா்களுக்கான நோ்காணல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் நடைபெறவுள்ளது.
தேவையான தகுதிகள்: குறைந்தது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம்.
சுய தொழில் செய்பவா்கள் மற்றும் வேலையில்லா இளைஞா்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகா்கள், முகவா்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவா்களாக சேர விருப்பம் உள்ளவா்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போா்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் முதுநிலை செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016
(ஆலந்தூா் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில் வரும் ஜூன் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...