அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்

Govt transport corporations need proper allocation of funds: Ramadoss

News image

ராமதாஸ் (கோப்புப்படம்)

Updated On :9 ஜூன் 2024, 9:45 pm

Din

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள் உதிரி பாகங்கள் வாங்க, தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூரில் ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுநா்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் விபத்துகள் தவிா்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக அரசுப் பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகின்றன. அரசுப் பேருந்துகளின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசுதான் காரணம். பழுதடைந்த பேருந்துகளைச் சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25 சதவீத பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

அரசு பேருந்துகளை பழுது நீக்குவது போக்குவரத்துக் கழகங்களின் அடிப்படை கடமை. எனவே, பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரிப் பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.