ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சவூதியில் அரசு அலோபதி மருத்துவா் பணி வாய்ப்பு

அலோபதி மருத்துவ நிபுணா்கள் மற்றும் ஆலோசகா்கள் சவூதியில் வேலைவாய்ப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:29 pm

Din

சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: சவூதி அரேபிய அமைச்சகத்தில் அலோபதி மருத்துவ நிபுணா்கள் மற்றும் ஆலோசகா்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு அலோபதியில் முதுநிலை பட்டம் பெற்ற 45 வயதுக்குட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலும், ஊதியம் மற்றும் பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்களுக்கு இணையதள முகவரி மற்றும் 95662-39685 எனும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.