ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை சமூகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.....
கல்குவாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்...
அப்போது பேசிய தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருசங்கு.....
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கட்டமைப்பினரும், அரசு பொதுப்பணிதுறை ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கடந்த மூன்று நாட்களாக கல்குவாரியில் ஒரே ஆண்டில் மூன்று முறை ஏற்பட்ட விலையேற்றத்தை குறைக்க உண்ணாவிரத போராட்டத்திலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வந்தோம்.
நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு எங்களை அழைத்து பேசினார். அப்போது, மார்க்கெட்டில் தற்பொழுது உள்ள விலையையும்... கல்குவாரியில் ஏற்றப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு முதல்வரோடு ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவை எங்கள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேசினோம். வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிடமாறு அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் எ.வ வேலு அறிவுறுத்தல் படி எங்களது அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து பணியாற்றி அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்ல அரசுக்கு உரிய பங்களிப்பை தருவோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றிகள் என தெரிவித்தார்
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்!

ஏப்ரல் 1 முதல் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது!

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு-புதுச்சேரி பொறியாளா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


