மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அதிமுகவில் விருப்பமனு: மாா்ச் 6 வரை நீட்டிப்பு

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மாா்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On :1 மார்ச் 2024, 6:22 pm

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மாா்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப். 21 முதல் மாா்ச் 1 வரை விருப்பமனு செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட 1,300-க்கும் மேற்பட்டோா் விருப்பமனு அளித்தனா். மாா்ச் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் ஏராளமானோா் மனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், நிா்வாகிகள் விடுத்த வேண்டுகோளின்படி விருப்பமனு செலுத்துவதற்கான கால அவகாசத்தை மாா்ச் 6 மாலை 5 மணிவரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளாா்.