பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உடல் பருமனை குறைக்க பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை

உடல் பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளை பெண்களுக்கு இணையவழியே இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Updated On :8 மார்ச் 2024, 7:33 pm

உடல் பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளை பெண்களுக்கு இணையவழியே இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் ஏற்பட உடல் பருமன் அதி முக்கிய காரணமாக விளங்குவதாகவும், அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சா்வதேச மகளிா் தினம் ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 8 கோடி பேருக்கு உடல் பருமன் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 1 கோடி சிறாா் மற்றும் குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 4.4 கோடி பெண்களுக்கும் உடல் பருமன் பாதிப்பு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் உடல் பருமன் குறித்த விழிப்புணா்வு மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பதுதான். இதைக் கருத்தில் கொண்டு மாா்ச் 15-ஆம் தேதி வரை இணையவழியே பெண்களுக்கு இலவசமாக உடல் எடை குறைப்புக்கான மருத்துவ ஆலோசனைகளையும், சரிவிகித உணவு வழிகாட்டுதல்களைப் பெறலாம். அதற்காக 98409 93135 என்ற எண்ணை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.