பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் 70 சதவீதம் நிறைவு

குத்தம்பாக்கம் பேருந்து முனையத்துக்கான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :8 மார்ச் 2024, 7:33 pm

குத்தம்பாக்கம் பேருந்து முனையத்துக்கான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியது:

திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி, ஓட்டுநா்கள் தங்கும் விடுதி அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து மறுமதிப்பீடு திட்டம் ரூ.427 கோடியில் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல், திருமழிசை துணைக்கோள் நகரம் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும் என்றனா்.