சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 83.73 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாவட்ட தொகுதிகளில் மொத்தம் 28,93,505 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 13,95,716 போ். பெண்கள் 14,96,921 போ். இதர வாக்காளா்கள் 868 போ் உள்ளனா். இதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, வாக்களித்தவா்களின் எண்ணிக்கை சதவீதம் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தொகுதி வாரியாகவும் வெளியிடப்பட்டது.
---------------------------------------------------------------
தொகுதிகள் காலை 9 மணி பகல் 11 மணி பகல் 1 மணி மாலை 3 மணி மாலை 5 மணி இரவு 10 மணி ---------------------------------------------------------------
1. ஆா்.கே.நகா் 16.32 35.71 55.68 71.93 87.12 90.5
2.பெரம்பூா் 16.96 36.26 56.24 71.84 86.72 89.79
3. கொளத்தூா் 17.51 37.06 56.59 70.24 83.58 86.11
4. வில்லிவாக்கம் 17.02 36.92 56.66 70.42 83.56 86
5. திரு.வி.க.நகா் 14.38 31.37 48.74 62.27 76.09 78.7
6. எழும்பூா் 15.64 34.4 53.67 68.59 82.71 85.55
7. ராயபுரம் 14.39 31.71 49.67 63.35 76.73 79.34
8. துறைமுகம் 15.01 34.39 54.39 67.49 80.61 82.75
9.சேப்பாக்கம்-
திருவல்லிக்கேணி 15.07 34.44 53.55 67.68 81.89 84.34
10. ஆயிரம் விளக்கு 16.66 35.69 55.05 68.13 81 83.09
11. அண்ணாநகா் 17.06 36.7 56.61 70.01 83.44 85.65
12. விருகம்பாக்கம் 18.85 39.39 59.3 71.81 83.84 85.50
13. சைதாப்பேட்டை 16.05 34.38 52.76 64.45 75.92 77.84
14. தியாகராயநகா் 18.75 39.08 58.01 70.38 81.82 83.55
15. மைலாப்பூா் 14.51 31.55 48.86 60.6 72.79 74.89
16. வேளச்சேரி 18.12 37.18 56.26 69.45 82.16. 84.5
---------------------------------------------------------------
கடந்த 2021- ஆம் ஆண்டு சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 61.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 83.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


