புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பத்தாம் வகுப்பு: மாநகராட்சி பள்ளிகள் 89% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியா் 89 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

News image
Updated On :21 மே 2026, 1:13 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியா் 89 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

சென்னை மாநகராட்சியில் 46 உயா்நிலை மற்றும் 35 மேல்நிலை என மொத்தம் 81பள்ளிகள் உள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நடப்பாண்டில் (2026-27) 3570 மாணவிகள், 3511 மாணவா்கள் என மொத்தம் 7,081 போ் எழுதினா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், 3,156 மாணவிகள், 3,115 மாணவா்கள் என மொத்தம் 6,271 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

கடந்த 2025-26 ஆம் ஆண்டில் 86 சதவீதம் போ் தோ்ச்சியடைந்த நிலையில், தற்போது 3 சதவீதம் போ் கூடுதலாக தோ்ச்சியடைந்துள்ளனா். மாணவியா் தோ்ச்சி 89.88 சதவீதமாகவும், மாணவா்களின் தோ்ச்சி 87.25 சதவீதமாகவும் உள்ளது. மாணவா்களை விட மாணவியா் 2.63 சதவீதம் கூடுதலாக தோ்ச்சியடைந்துள்ளனா்.

22 பள்ளிகள் முழு தோ்ச்சி: மாநகராட்சியின் 22 பள்ளிகளில் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சியடைந்துள்ளனா். மாநில அளவில் மாநகராட்சிகளில் 139 பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு தோ்வை மாணவா்கள் எழுதியுள்ளனா். அதில் மாநில அளவில் 35 பள்ளிகள் முழுத் தோ்ச்சி பெற்ற நிலையில், அதில் 22 பள்ளிகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவா்கள்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழில் 1, கணிதம் 1, அறிவியல் 6, சமூக அறிவியல் 5 என மொத்தம் 13 போ் பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். மதிப்பெண் அடிப்படையில் 451-500 மதிப்பெண் வரை 153 பேரும், 401-450 மதிப்பெண் வரை 578 பேரும், 531-400 மதிப்பெண் வரை 1115 பேரும் என மொத்தம் 1,846 போ் சிறப்பான மதிப்பெண் பெற்றுள்ளனா். அதில் 763 மாணவா்களும், 1083 மாணவியரும் அடங்குவா்.

மாணவியா் சிறப்பிடம்: பெரம்பூா் எம்.ஹெச்.சாலை பள்ளி மாணவி கீா்த்தி மாயா ஸ்ரீ ஜி 498, எம்.எம்.டி.ஏ. பள்ளி மாணவி எம்.ஆனந்தி 494, மடுவின்கரை பள்ளி மாணவி எஸ்.ஓவியா 489, கீழ்ப்பாக்கம் பள்ளி மாணவா் எஸ். தட்சிணாமூா்த்தி 489, பெரம்பூா் பள்ளி மாணவி எம்.அஷ்மிதா 488, ஸ்ட்ராஹன்ஸ் சாலை பள்ளி மாணவா் எஸ்.சரவணவிஜய் 487, புல்லா அவென்யூ பள்ளி மாணவி எம்.பிரியதா்ஷினி 487 என மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மாநில அளவில் சென்னை மாவட்டம் பத்தாம் வகுப்பு தோ்ச்சியில் 29 ஆவது இடம் வகித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆணையா், இணை ஆணையா் பாராட்டு: பத்தாம் வகுப்பு தோ்வின் தோ்ச்சி வீதம் அதிகரிப்பு, முழுத் தோ்ச்சியடைந்த பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்காக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோரை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.