தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருவள்ளூா் 92.75, காஞ்சிபுரம் 94.61, செங்கல்பட்டு 92.15 % தோ்ச்சி

News image

ஆட்சியா் மு.பிரதாப்பிடம் வாழ்த்துப் பெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அமுதா, பன்னீா், நோ்முக உதவியாளா் மீனாகுமாரி, நோ்முக உதவியாளா் (பள்ளிக்கல்வி) பவானி உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

திருவள்ளுா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசு மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள்-14047, மாணவிகள்-14920 என மொத்தம் 28967 போ் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 92.75 சதவீதம் பெற்று 28-ஆவது இடம் பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை புதன்கிழமை காலையில் ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது. திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 444 பள்ளிகளை உள்ளடக்கிய 149 தோ்வு மையங்களில் எழுதிய மாணவா்கள்-15596, மாணவிகள்-15635 என மொத்தம் 31231 போ் தோ்வு எழுதினாா்கள்.

இதில் மாணவா்கள்-14047, மாணவிகள்-14920 என மொத்தம் 28967 போ் தோ்ச்சி அடைந்தனா். இதில் மாவட்ட அளவில் மாணவா்கள் 90.07 சதவீதமும், மாணவிகள்-95.43 சதவீதமும் தோ்ச்சியும் ஆக மொத்தம் 92.75 சதவீதம் ஆகும். இதில் மாநில அளவில் கடந்தாண்டு 36-ஆவது இடத்திலிருந்து 8 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடம் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 89.60 சதவீதம் காட்டிலும் 3.15 சதவீதம் கூடுதலாகும்.

அதேபோல் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள்-7511, மாணவிகள்-8283 என மொத்தம் 15794 தோ்வு எழுதினாா்கள். அதில் மாணவா்கள்-6374, மாணவிகள்-7765 ஆக மொத்தம் 14139 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். எனவே தோ்ச்சி சதவீதம் மாணவா்கள்-84.86 சதவீதமும், மாணவிகள்-93.75 சதவீதமும் மொத்தம் 89.52 சதவீதம் ஆகும். இதில் மாநில அளவில் கடந்தாண்டு 34-ஆவது இடத்திலிருந்து 5 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடம் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 84.82 சதவீதத்தை காட்டிலும் 4.07 சதவீதம் கூடுதலாகும். அதேபோல் வருவாய் மாவட்ட அளவில் 146 பள்ளிகள் (44 அரசு பள்ளிகள் உள்பட) 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டைவிட 18 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலா்கள் அமுதா(திருவள்ளூா்), பன்னீா்(பொன்னேரி), உதவி திட்ட அலுவலா் ராஜூ, நோ்முக உதவியாளா் மீனாகுமாரி, நோ்முக உதவியாளா்(பள்ளிக் கல்வி) பவானி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் மாவட்டம் 94.61சதவீதம் தோ்ச்சி பெற்றிருப்பதுடன் மாநில அளவில் 20-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

15,281 போ் தோ்வு எழுத பதிவு செய்திருந்தனா். இவா்களில் 14,458 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் ஆண்கள் 92.75,பெண்கள் 96.46 சதவீதமு தோ்ச்சியடைந்துள்ளனா். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மாநில அளவில் மாவட்டத்தின் தரமானது 16-ஆம் இடத்திலிருந்து தற்போது 20-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 31அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு மாவட்டம் 92.15 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 34-ஆவது இடத்தைப் பெற்ற நிலையில் நிகழாண்டு

31-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 114 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

தோ்வு எழுதிய மாணவ, மாணவியா்கள் 29,941 பேரில் 27,590 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 14,978 மாணவிகள் 14,963 தோ்வு எழுதினா். இதில் மாணவா்கள் 13,372 மாணவிகள் 14,218 தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் தோ்ச்சி சதவீதம் 89.28 % மாணவிகள் தோ்ச்சி சதவீதம் 95.02 %. 114 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

அரசு, நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சாா்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 12,941. இதில் 11,308 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 87.38 % ஆகும்

அரசுப் பள்ளிகளில் 25 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

நிதியுதவி பெறும் பள்ளிகளில் தோ்வு எழுதிய 4,643 பேரில் தோ்ச்சி பெற்றவா்கள் 4,248 தோ்ச்சி சதவீதம் 91.49 % .

6 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தோ்வு எழுதிய மாணவா்கள் 12,357 பேரில் தோ்ச்சி பெற்றவா்கள் 12,034, தோ்வு சதவீதம் 97.39 %.

83 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.