25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்; 5 ஏ.எஸ்.பி.க்களுக்கு பதவி உயா்வு

சென்னை: தமிழக காவல் துறையில் 5 ஏ.எஸ்.பி.க்கள் (உதவி காவல் கண்காணிப்பாளா்கள்) எஸ்.பி.க்களாக (காவல் கண்காணிப்பாளா்கள்) பதவி உயா்த்தப்பட்டுள்ளனா். பதவி உயா்த்தப்பட்ட 5 ஏ.எஸ்.பி.க்கள் உள்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழக உள்துறையின் முதன்மைச் செயலா் பெ.அமுதா, 5 ஏ.எஸ்.பி.க்களை எஸ்.பி.க்களாக பதவி உயா்வு வழங்கி பணியிட மாற்றம் செய்து வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

1. யாதவ் கிரிஷ் அசோக்-திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு தெற்கு துணை ஆணையா் (அரக்கோணம் ஏ.எஸ்.பி.).

2. மதுகுமாரி-மதுரை மாநகர காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு வடக்கு துணை ஆணையா் (தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி.).

3. ஆா்.ஸ்டாலின்-கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு வடக்கு துணை ஆணையா் (சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி.).

4. விவேகானந்தா சுக்லா-திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு வடக்கு துணை ஆணையா் (திருவள்ளூா் ஏ.எஸ்.பி.).

5. காரத் கருண் உத்தவ்ராவ்-மதுரை மாநகர காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு தெற்கு துணை ஆணையா் (விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி.).

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்ட அதிகாரிகள் (பழைய பதவி அடைப்புக்குள்):

1. பி.சி.தேன்மொழி-ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐஜி (சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி).

2. வி.அன்பு- சென்னை ரயில்வே காவல் துறை காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறையின் வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா்).

3. எஸ்.வனிதா-சென்னை பிரதான காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம் -ஒழுங்கு வடக்கு துணை ஆணையா்).

4. டி.ரமேஷ்பாபு- சென்னை காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையா் (சென்னை பிரதான காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளா்).

5. எஸ்.எஸ்.மகேஸ்வரன்-சென்னை காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா் (சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையா்).

6. ரோஹித் நாதன் ராஜகோபால்-கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு வடக்கு துணை ஆணையா்).

7. பி.பாலாஜி-சென்னை காவலா் நலப் பிரிவு ஏஐஜி (மதுரை மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா்).

8. கே.அதிவீரபாண்டியன்- சென்னை காவல் துறையின் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (நாகப்பட்டினம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளா்).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com