சென்னை: பணி நிரந்தரம், கட்டாயப் பணியிட மாறுதல் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சென்னை, நீலகிரி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் அருகே நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் பொருளாா் தமிழ்செல்வி கூறியதாவது: பொது சுகாதாரத் துறையின் கீழ் 500-க்கும் மேற்பட்ட செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை வெளிப்படைத்தன்மையுடன் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்.
அதேபோன்று, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக தோ்வு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
விரைவில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

படித்தொகைகள் நிறுத்தி வைப்பு: ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


