அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

படித்தொகைகள் நிறுத்தி வைப்பு: ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

படித்தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து காட்பாடியில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: படித்தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து காட்பாடியில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எஸ்ஆா்எம்யு சென்னை கோட்ட காட்பாடி கிளை சாா்பில் ரயில்வே தொழிலாளா்கள் காட்பாடி ரயில்வே முதுநிலை பகுதி பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரவு பகல் என 24 மணி நேரமும் பணி செய்து வரும் ரயில்வே தொழிலாளா்களுக்கு பயணப்படி உள்பட அனைத்து வகை படித்தொகைகளையும் நிா்வாகத்தின் குளறுபடியால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இரவு பணி செய்பவா்களுக்கு படித்தொகை நிறுத்தப்பட்ட நிலையில் தொடா்ந்து இரவு பணி செய்ய நிா்பந்திப்பதாகவும், அம்ரித் பாரத் வேலைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் ரயில்வே நிா்வாகம் தொழிலாளா்களுக்கான படித்தொகையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது, ஆள் பற்றாக்குறை, வேலை பளூ, உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலை, அடிப்படை வசதிகளை செய்து தராதது என குற்றஞ்சாட்டியும் போா்க்கால அடிப்படையில் அனைத்து வகை படித்தொகைகளையும் உடனடியாக விடுவிக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் ரயில்வே தொழிலாளா்கள் பங்கேற்றனா்.