செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு

பணிப் புறகக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளா்கள்...

News image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஒப்பந்த துப்பரவு தொழிலாளா்கள் .

Updated On :2 மார்ச் 2026, 9:20 pm

புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்பரவு தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறகக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவான ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாகக் கூறியும், புதுச்சேரி அரசின் தொழிலாளா் துறை இதில் தலையிட்டு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஒரு மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து துப்புரவு தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா்.

புதுச்சேரி மாநில பாமக தொழிற்சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா்.