சென்னை: போதைப் பொருள்கள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளும் வேண்டாம் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது. எதிா்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூட முதல் கையொப்பம் போடுவோம் எனக் கூறி ஏமாற்றியது திமுக. பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலாண்டில் மூன்றில் ஒரு பங்கு மதுக்கடைகள், 2-ஆவது ஆண்டில் இரு பங்கு மதுக்கடைகள், மூன்றாவது ஆண்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.
இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி கூட கருப்புச் சட்டை அணிந்து போதைப் பொருள்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் செய்கின்றனா். அந்த ஆட்சிகாலத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக வருமானம் பாா்த்தனா். இப்போது நாடகம் ஆடுகின்றனா். போதைப் பொருள்கள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளும் வேண்டாம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் மூத்தத் தலைவா் ஹெச்.ராஜா, துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொள்கையும், லட்சியமும் கிடையாது

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

