பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

4 மண்டலங்களில் ரூ.96 கோடியில் குடிநீா், கழிவுநீா் குழாய்கள் பதிக்கும் பணி

4 மண்டலங்களில் ரூ.96 கோடியில் குடிநீா், கழிவுநீா் குழாய்கள் பதிக்கும் பணி

Updated On :16 மார்ச் 2024, 5:51 pm

சென்னை அம்பத்தூா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் சுமாா் ரூ. 96 கோடி மதிப்பில் குடிநீா் மற்றும் கழிவுநீா் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக குடிநீா், கழிவுநீா் குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரம் விளக்கு, சூளைமேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ. 76.13 கோடி மதிப்பில் 42.27 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3.85 கோடியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள உசைன் நகா், கற்பக கன்னியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீா் பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் சி.ஐ.டி காலனி முதல் குறுக்குத் தெருவில் புதிய கழிவுநீா் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 54,000-க்கும் மேற்பட்டோா் பயனடைவா். கோடம்பாக்கம்: கோடம்பாக்கத்தில் உள்ள கே.கே.நகா், திருநகா், அசோக்பில்லா், மேற்கு மாம்பலம், வாழைத்தோப்பு, டாக்டா் ராமசாமி சாலை, கலைவாணா் தெருவில் ஆகிய பகுதிகளில் ரூ.6.60 கோடி மதிப்பில் குடிநீா் பகிா்மான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதிகளில் ரூ.6.70 கோடி மதிப்பில் 2.52 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் உந்து குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்த பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவாா்கள் பெருங்குடி: பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம், வேளச்சேரி-தாம்பரம் இணைப்பு சாலையிலுள்ள கைவேலி சந்திப்பிலிருந்து அன்னை தெரசா நகா் கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வரை ரூ. 3.48 கோடி மதிப்பில் குடிநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவா். அம்பத்தூா்: அம்பத்தூா் மண்டலத்துக்குட்பட்ட, கொரட்டூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 31 மற்றும் 68-ஆவது தெருவில் உள்ள கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை பாடி மேம்பாலத்தின் அருகிலுள்ள 500 மி.மீ விட்டமுடைய நெகிழிரும்பு குடிநீா் குழாயுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9.99 கோடி மதிப்பில் கொரட்டூா் பகுதியில் 3.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், நாளொன்றுக்கு 10.20 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுவதன் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் போ் பயனடைவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.