சென்னை: தென்னிந்திய பகுதியில் நிலவும் வழிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் புதன்கிழமை முதல் சனிக்கிழமை(மாா்ச் 20-23) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (மாா்ச் 24, 25) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு(டிகிரி பாரன்ஹீட்): சேலம், ஈரோடு-101.84, பரமத்தி வேலூா்-101.3, தருமபுரி, நாமக்கல்-99.5.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம் மழைக்கும் வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


