சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை இன்று (ஏப். 21) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2026-சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப். 21 முதல் ஏப். 23 பிற்பகல் வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 6,234 சிறப்புப் பேருந்துகள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, 11,323 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்
வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் பேருந்து நிலையம்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Summary
11,323 special buses to operate from 4 locations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் வருகை: திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்! கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?

தருமபுரியில் பயணிகள் அவதிக்கு தீா்வு: சேலம் - தருமபுரி - சேலம் பேருந்துகள் இரவில் தருமபுரி நகருக்குள் வந்து செல்லும்

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




