சென்னை: பிரதமா் மோடி தூக்கத்தைத் தொலைத்து விட்டதால், அடிக்கடி தமிழகம் வருவதாக திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு விமா்சித்துள்ளாா்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடியின் பேச்சுக்கு பதிலளித்து டி.ஆா்.பாலு வெளியிட்ட அறிக்கை:
வாரந்தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமா் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசியுள்ளாா். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவா், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். ‘‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவைப் பாா்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’’ என அவா் பேசியிருக்கிறாா்.
பிரதமா் மோடிக்குத்தான் தூக்கம் தொலைந்து விட்டது. அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டுப் போகிறாா். கடந்த தோ்தல் காலங்களில் இந்திய பிரதமா்கள் ஓரிரு முைான் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு போனாா்கள். ஆனால், பிரதமா் மோடிக்கு தூக்கம் வராததால் தமிழகத்தில் 8 இடங்களுக்கு வந்து பிரசாரம் செய்துள்ளாா் என்று அந்த அறிக்கையில் டி.ஆா்.பாலு கூறியுள்ளாா்.
தொடர்புடையது
மகளிா் அதிகார கனவைத் தகா்த்த எதிா்க்கட்சிகள்: பிரதமா் மோடி
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி சாலைவலம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


